தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படி, தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட சிதம்பரநகர் பகுதியில் நடைபெற்று வரும் முழு நேர கிளை நூலகத்தின் கட்டுமானப் பணிகளை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது, நூலகக் கட்டுமானப் பணிகளின் தற்போதைய நிலை, முன்னேற்றம், மற்றும் நிறைவு பெறும் காலக்கெடு குறித்து மேயர் கேட்டறிந்தார். மேலும், நூலகம் அனைத்து வசதிகளுடன் கூடிய நவீன நூலகமாக அமைய வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது, மாநகராட்சி ஆணையர் மதுபாலன் இ.ஆ.ப., பகுதி கழகச் செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ் குமார் ஆகியோர் உடனிருந்தனர்.