தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி, தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட சண்முகபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள சிவந்தாகுளம், வண்ணார் முதல் தெரு மற்றும் இரண்டாவது தெரு ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் புதிய பேவர் பிளாக் கற்கள் பதிக்கும் பணிகளை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்தப் பகுதிகளில் புதிய பேவர் பிளாக் சாலைகள் அமைக்கும் பணிகள் விரைவாகவும், தரமாகவும் நடைபெறுவதை உறுதிசெய்யும் வகையில் மேயர் இந்த ஆய்வை மேற்கொண்டார். பணிகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டறிந்ததுடன், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிக்குமாறு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது, வட்டக் கழகச் செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், பகுதி கழகச் செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ் குமார், மாமன்ற உறுப்பினர் பாப்பாத்தி, கழக நிர்வாகி ஏசுவடியான், வட்டக் கழக நிர்வாகி பாலரூபன் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.