தூத்துக்குடியில் கேரிப்பை ஒழிக்க மாநகராட்சி பகுதியில் புதிய திட்டம்:மேயர் ஜெகன் பொியசாமி தகவல்!

தூத்துக்குடி மாநகராட்சி மாசுபடுவதை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேயர் ஜெகன் பொியசாமி, ஆணையர் ப்ரியங்கா ஆகியோர் மேற்கொண்டு வருகின்றனர் அதற்கான பல்வேறு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மண்டல அலுவலகத்தில் பொதுமக்களிடம் பெறப்பட்ட மனுக்கள் மீது தீர்வு காணப்பட்ட மனுக்களுக்கு மாநகராட்சி அலுவலகத்தில் 16 நபர்களுக்கு மேயர் ஜெகன் பொியசாமி அதற்கான ஆணையை வழங்கி பேசுகையில் மாநகராட்சி மூலம் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது சொத்து வரி புதிய தீர்வை குடிநீர் இணைப்பு உடனுக்குடன் சாலை வசதிகள் பொதுமக்களுக்கு தேவையான வசதிகள் அனைத்தும் செய்யப்படுகிறது மக்கள் முற்றிலும் கேரிப் பை தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்பொருட்கள் பயன்படுத்துவதை தவிா்க்க வேண்டும் பக்கிள் ஓடையில் கேரிபை பொதுமக்கள் போட்டு வருகின்றனர் கேரிபை போட வேண்டாம் அதற்காக புதியதாக ஒரு திட்டம் நடைமுறைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பக்கிள் ஓடை ஏழு கிலோ மீட்டர் தூரம் உள்ளது முக்கிய இடங்களில் எல்லாம் இந்த இடத்தில் கேரி பை குப்பை போட வேண்டாம் இந்தப் பகுதியில் என்னை அசுத்தம் செய்ய வேண்டாம் நான் முத்து பேசுகிறேன். அதுபோல நான் முத்து மாநகரம் பேசுகிறேன் உள்ளிட்ட வசனங்கள் கூடிய போர்டு வைக்கப்படுகிறது அதன் மூலம் பொது மக்களுக்கு ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் அதனால் கேரிபை மாநகரத்தில் முற்றிலும் தடுக்கப்படலாம் பக்கிள் ஓடையில் போடுவதை முற்றிலும் நிறுத்த முடியும் மாநகராட்சி பணிகளுக்கும் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களுக்கும் பொதுமக்கள் துணையாக இருக்க வேண்டும் என்று மேயர் ஜெகன் பொியசாமி பேசினாா்.

Leave a Reply