தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட ரோச் பூங்காவில், ஸ்கேட்டிங் ஸ்போர்ட்ஸ் அசோசியேஷன் ஆஃப் தூத்துக்குடி சார்பில், மாவட்ட அளவிலான ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் 2025 போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்தார்.
போட்டிகள் நிறைவடைந்ததும், வெற்றி பெற்ற மாணவ-மாணவியருக்கு மேயர் ஜெகன் பெரியசாமி பரிசுகளை வழங்கினார். இந்த நிகழ்வில் வட்டக் கழகச் செயலாளர் ரவீந்திரன், முன்னாள் மாமன்ற உறுப்பினர் பெரியசாமி, மாநகர மீனவர் அணி அமைப்பாளர் டேனி, அசோசியேஷன் நிர்வாகிகள், பயிற்சியாளர்கள் மற்றும் மாணவ-மாணவியர் பலர் கலந்துகொண்டனர்.
செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு:-
தூத்துக்குடி மக்கள் செய்திகள்:
PH-97896-25946,0461-7960026.

