Site icon thoothukudipeople.com

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் மணல்திட்டுகள் அகற்றும் பணி:மேயா் ஜெகன் பொியசாமி ஆய்வு

தூத்துக்குடி,நவம்பர்;17-

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் பருவசூழ்நிலைக்கு ஏற்ப சாலைகளில் பல்வேறு இடங்களில் மணல் திட்டுகள் தேங்குகிறது. அதனால் சில சமயங்களில் விபத்துக்கள் ஏற்படும் சூழ்நிலை உருவாகி வருகிறது. இதைஅப்புறம் படுத்தும் பணி 60 வாா்டுக்குட்பட்ட பிரதான சாலையில் மாநகராட்சி சுகாதார பணிகள் அலுவலா்கள் மூலம் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் மாநகராட்சிக்குட்பட்ட ஜாா்ஜ் ரோடு பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த மணல்திட்டுகளை அகற்றும் பணியை ஆய்வு மேற்கொண்டு முழுமையாக அப்புறப்படுத்த உத்தரவிட்டபின் வாடி தெருவில் புதிதாக தாா்சாலை அமைக்கும் பணியை மேயா் ஜெகன்பொியசாமி ஆய்வு மேற்கொண்டாா்.
வடக்கு மாவட்ட திமுக அவைத்தலைவா் செல்வராஜ் பொதுக்குழு உறுப்பினா் கோட்டுராஜா சுகாதார ஆய்வாளா் ராஜபாண்டி போல்பேட்டை பகுதி பிரதிநிதி பிரபாகா் உள்பட மாநகராட்சி அலுவலா்கள் பொதுமக்கள் இருந்தனா்.

Exit mobile version