பள்ளி மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள்: அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்!

தூத்துக்குடி தஸ்நேவிஸ் மாதா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பதினோராம் வகுப்பு மாணவிகளுக்கு அரசின் சார்பில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் கலந்து கொண்டு, இந்த பள்ளியில் பதினோராம் வகுப்பு படிக்கும் 176 மாணவிகளுக்கு விலையில்லா மிதி வண்டிகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் பள்ளித் தாளாளர் பெர்னட் மேரி, பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயந்தி, பகுதி செயலாளர் ஜெயக்குமாா், மாவட்ட மீனவரணி துணை அமைப்பாளா் ஜேசையா, மாநகர இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன்ஜேக்கப், வட்டச்செயலாளர் டென்சிங், பகுதி தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் சுரேஷ்குமாா், பகுதி பிரதிநிதி மாியதாஸ், பெருமாள் கோவில் அறங்காவல குழு தலைவர் செந்தில்குமார் மற்றும் கமலி, மணி, அல்பட் உள்பட பலா் கலந்து கொண்டனர்.

Leave a Reply