உலகம் உங்கள் கையில்: தூத்துக்குடியில் 1056 மாணவர்களுக்கு இலவச மடிக்கணினிகள் வழங்கினார்; அமைச்சர் கீதாஜீவன்!

திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் உலகம் உங்கள் கையில் என்ற திட்டத்தின் படி தமிழகம் முழுவதும் 20 லட்சம் பேருக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்து முதற்கட்டமாக 10 லட்சம் பேருக்கு இலவச மடிக்கணினி தமிழகம் முழுவதும் வழங்கப்பட்டு வருகிறது.

அத்திட்டத்தின்படி தூத்துக்குடி மாநகராட்சி மையத்தில் நடைபெற்ற விழாவிற்கு மாவட்ட கலெக்டா் இளம்பகவத் தலைமை வகித்தாா். மகளிா் திட்ட இயக்குநா் நாகராஜன், வரவேற்புரையாற்றினாா். 11 கல்லூாிகளை சேர்ந்த 1056 மாணவ மாணவிகளுக்கு இலவச மடிக்கணினிகளை வழங்கி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.

விழாவில் மாா்க்கன்டேயன் எம்.எல்.ஏ, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் செந்தில்வேல்முருகன், தாசில்தாா் திருமணி ஸ்டாலின், ஒன்றிய செயலாளா்கள் இம்மானுவேல், செல்வராஜ், மாநகர இலக்கிய அணி அமைப்பாளா் ஜீவன்ஜேக்கப், இளைஞர் அணி அமைப்பாளர் அருண்சுந்தர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply