தூத்துக்குடியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி விளையாட்டு வீரர்களுக்கு, டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்களை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 30.12.2025 அன்று ஈரோடு மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி ஊரகப்பகுதி விளையாட்டு வீரர்களுக்கு கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் 30 வகையான விளையாட்டு உபகரணங்கள் வழங்கியதை முன்னிட்டு,
தூத்துக்குடி தருவை மைதானம் உள்அரங்கில் நடைபெற்ற விழாவில் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதாஜீவன், கோவில்பட்டி, திருச்செந்தூர், காயல்பட்டினம் நகராட்சிகள், ஆத்தூர், சாயர்புரம், தென் திருப்பேரை, நாசரேத் பேரூராட்சி ஊரக பகுதிகளை சேர்ந்த விளையாட்டு வீரர்களுக்கு கிரிக்கெட், வாலிபால், ஃபுட்பால், இறகு பந்து, கேரம், ஸ்கிப்பிங், சிலம்பம், சதுரங்கம், எரிபந்து, ஜிம்னாஸ்டிக், வெயிட் லிப்ட்டிங் உள்ளிட்ட விளையாட்டுகளுக்கு தேவையான 30 வகையான உபகரணங்களை அமைச்சர் கீதாஜீவன் வழங்கி சிறப்புரையாற்றினார்.
தொடர்ந்து விளையாட்டு உபகரணங்கள் கொண்டு செல்லும் வாகனத்தை அமைச்சர் கீதாஜீவன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் நிகழ்ச்சியில் தூத்துக்குடி, மாநகராட்சி ஆணையர் ப்ரியங்கா, மாவட்ட விளையாட்டு அலுவலர் ஜெய ரத்தினராஜ், மாநகராட்சி சுகாதார அலுவலர்கள் ஸ்டாலின் ராஜசேகரன், ராஜபாண்டி, கோவில்பட்டி ஹரி கணேஷ், மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், பகுதிச் செயலாளர் ஜெயக்குமார், வட்ட செயலாளர் டென்சிங், மாவட்ட மருத்துவர் அணி தலைவர் அருண்குமார், தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் அபிராமி நாதன், தொகுதி ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை, பகுதி ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார், அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், பிரதிநிதி பாஸ்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

