Site icon thoothukudipeople.com

தூத்துக்குடி அய்யா்விளை பகுதியில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு

தூத்துக்குடி,நவம்பர்-25,

தூத்துக்குடியில் வடகிழக்குப் பருவமழையால் அய்யர்விளை குடியிருப்புப் பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்த தகவல் கிடைத்ததையடுத்து, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அவர் உடனடியாக பம்ப் ரூம் பகுதியில் ஏற்பட்டிருந்த அடைப்புகளை நீக்கிச் சீர் செய்யும் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தினார் அத்துடன் பொதுமக்களிடம் குறைகளையும் கேட்டறிந்தார்.

அப்போது பேசிய அவர், 10 ஆண்டு அதிமுக ஆட்சியில் பொதுமக்களுக்கான எந்த அடிப்படை பணிகளை செய்யாமல் இருந்ததின் காரணமாக பல குறைபாடுகள் ஏற்பட்டது. திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான முக.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின் ரூரல் பகுதியாக இருந்து மாநகராட்சியோடு இணைக்கப்பட்ட இந்த பகுதியில் புதிதாக கால்வாய் சாலை மின்விளக்கு என அடிப்படை பணிகளை முழுமையாக செய்து கொடுத்ததை பொதுமக்கள் ஆகிய நீங்கள் நன்கு அறிவீர்கள் மழை காலம் மட்டுமின்ற கொரோனா காலக்கட்டத்திலும் பொதுமக்களோடு இருந்து பணியாற்றுவது எங்களுக்கு தலைவா் கொடுத்த உத்தரவாகும். தோ்தல் நேரத்தில் வந்து கருத்துக்களை தொிவிப்பவா்கள் மக்களை பற்றி சிந்திப்பவா்களாக இருக்க மாட்டாா்கள் உங்களோடு இருந்து பணியாற்றுபவா்கள் யாா் என்று அடையாளம் கண்டு வருங்காலங்களிலும் எங்களுக்கு துணையாக இருக்க வேண்டும் உங்களுக்கு நன்மை செய்பவா்களாக நாங்கள் இருப்போம் என்று அமைச்சர் கீதாஜீவன் தொிவித்தாா்.
மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகரன், பகுதி செயலாளர் ஜெயக்குமார், கவுன்சிலா் ஜெயசீலி, மாநகர திமுக இளைஞரணி அமைப்பாளர் அருண்சுந்தர் முன்னாள் அறங்காவலா் குழு தலைவர் செந்தில்குமாா், மற்றும் மணி அல்பட் ஆகியோர் உடன் இருந்தனர்.

Exit mobile version