தூத்துக்குடி மாவட்டம்,ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம், குலசேகரநல்லூர் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா அவர்கள் நேற்று (ஜூலை 20, 2025) மக்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார்.
குலசேகரநல்லூர் கிராமத்தில் உள்ள வடக்குத் தெரு உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களின் இருப்பிடங்களுக்கு நேரடியாகச் சென்ற எம்.எல்.ஏ. சண்முகையா, கிராமத்திற்குத் தேவையான அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.
அப்போது பொதுமக்கள், தெருவிளக்கு வசதி, குடிநீர் வசதி, இலவச வீட்டு மனை பட்டா மற்றும் மயானப் பாதை உள்ளிட்ட தங்களின் முக்கியத் தேவைகளைக் கோரிக்கைகளாக முன்வைத்தனர். மக்களின் கோரிக்கைகளைக் கவனமுடன் கேட்டறிந்த எம்.எல்.ஏ. சண்முகையா, அவற்றைச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வலியுறுத்தி விரைந்து நிறைவேற்றித் தருவதாக உறுதியளித்தார்.
இந்த மக்கள் சந்திப்பின்போது, மேற்கு ஒன்றியக் கழகத் துணைச் செயலாளர் லட்சுமணன், மாவட்டப் பிரதிநிதி கண்ணன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
உள்ளூர் தகவல்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள,
தூத்துக்குடி மக்கள் செய்திகள் WhatsApp சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்!
சேனலில் இணைய, இந்த இணைப்பைக் கிளிக் செய்யவும்: https://whatsapp.com/channel/0029Va6ahuJ2UPBOuJiyLl46