விவசாயிகள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நெல்லை ஆட்சியர்!

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் இரா. சுகுமார், இ. ஆ. ப., அவர்கள் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அந்தவகையில் கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் செயல்படுத்தப்படும் தீவன அபிவிருத்தி திட்டத்தின் கீழ், விவசாயி ஒருவருக்கு  புல் வெட்டும் கருவியினை மாவட்ட ஆட்சியர் சுகுமார் வழங்கினார். இந்தக் கருவியைப் பெற்ற விவசாயிகள், கால்நடை வளர்ப்புக்கு இது மிகவும் பயனுள்ளதாக அமையும் என்றும், தங்கள் நலனில் அக்கறை கொண்டு செயல்படும் ஆட்சியருக்கு, தமிழக அரசுக்கு மனமார்ந்த நன்றியையும் தெரிவித்துக் கொண்டனர்.

Leave a Reply