Site icon thoothukudipeople.com

நாடார் சமூகம் குறித்து அவதூறு: வழக்கறிஞர் செல்வகுமார் மீது நடவடிக்கை கோரி ஆட்சியரிடம் மனு!

தமிழக முன்னாள் முதல்வர் காமராஜர் மற்றும் நாடார் இன மக்கள் குறித்து அவதூறாகப் பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, தூத்துக்குடியில் பல்வேறு அமைப்புகள் சார்பில் இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

நாடார் மக்கள் கூட்டமைப்பு உள்ளிட்ட அமைப்புகள் கூட்டாக அளித்த இந்த மனுவில், “திமுக எம்பி திருச்சி சிவா காமராஜர் குறித்து அவதூறாகப் பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில், தூத்துக்குடி முள்ளக்காடு நகர்மன்றத் தலைவர் வழக்கறிஞர் செல்வகுமார், நாடார் இன மக்கள் குறித்து அவதூறான காணொளியைச் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். சம்பந்தப்பட்டவர்கள் மீது மாவட்ட ஆட்சியர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த மனுவை, சமத்துவ மக்கள் கழகம் சார்பில் மாலை சூடி அற்புதராஜ், பெருந்தலைவர் மக்கள் கழகம் க. மாரியப்பன், தமிழக வெற்றிக்கழக நிர்வாகி மற்றும் முன்னாள் மாமன்ற உறுப்பினர் ஆனந்தகுமார், இந்து முன்னணி மாவட்டச் செயலாளர் ராகவேந்திரா, இந்து மக்கள் கட்சி மாநிலச் செயலாளர் வசந்தகுமார், பூசாரிகள் பேரவை மாநில அமைப்பாளர் சாஸ்தா, வீர முருகன், அகில இந்திய நாடார் பாதுகாப்பு பேரவையின் மாவட்டப் பொறுப்பாளர்கள் ஜெயச்சந்திரன் மற்றும் கார்த்திசன், காமராஜர் நற்பணி இயக்கம் கிருஷ்ணராஜபுரம் அசோக், பாலா, பனைக்காட்டுப் படை கட்சி ஹரிராம் உள்ளிட்டோர் வழங்கினர். பல்வேறு கட்சியினர் மற்றும் பொதுமக்கள் இதில் கலந்துகொண்டனர்.

Exit mobile version