Site icon thoothukudipeople.com

தூத்துக்குடியில் பொங்கல் கோலப்போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு வழங்கல்!

தூத்துக்குடியில் பொங்கல் கோலப்போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு அதிமுக முன்னாள் அமைச்சா் சி.த.செல்லப்பாண்டியன் பாிசு வழங்கினாா்.

தூத்துக்குடி தமிழா் திருநாளான பொங்கல் விழாவை முன்னிட்டு 30வது வார்டு டூவிபுரத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் பொங்கல் கோலப்போட்டி நடைபெற்றது. விழாவிற்கு பா.ஜ.க. மாவட்ட துணைத்தலைவர் சண்முகசுந்தரம் தலைமை வகித்தார். அதிமுக மாநில வர்த்தக அணி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.த.செல்லப்பாண்டியன், பா.ஜ.க. ஆன்மிகப்பிரிவு இணை அமைப்பாளர் உஷாதேவி ஆகியோர் கோலப்போட்டியில் வென்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினாா்கள்.
நிகழ்ச்சியில் தொழிலதிபர் தனசேகரன், வேலுச்சாமி, கார்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். பொங்கல் கோலப்போட்டிக்கான ஏற்பாடுகளை 30வது வார்டு பா.ஜ.க. பிரமுகர் நடிகர் காசிலிங்கம் செய்திருந்தார்.

Exit mobile version