Site icon thoothukudipeople.com

“ரூ.3000 பொங்கல் பரிசு, மகளிர் உரிமைத்தொகை – மக்களின் மகிழ்ச்சியே அரசின் இலக்கு: அமைச்சர் கீதாஜீவன்!

தூத்துக்குடி தை பொங்கல் திருநாளை முன்னிட்டு 16 வார்டு தபால் தந்தி காலணி மக்கள் நல மன்றம் ராயல் ஸ்போா்ட்ஸ் கிளப் இணைந்து நடைபெற்ற பொங்கல் விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பாிசுகள் வழங்கி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில்;-
தமிழ்நாட்டில் தமிழா்களின் முக்கியத் திருவிழாவான பொங்கல் திருவிழாவை சமத்துவ பொங்கலாகவும் திராவிட மாடல் ஆட்சியில் எல்லா பகுதிகளிலும் சமத்துவத்தையும் சகோதரத்தையும் அன்புடன் பழகி கொண்டாடும் வகையில் நடைபெற்ற போட்டியில் கலந்து கொண்ட அனைவரையும் பாராட்ட கடமை பட்டுள்ளேன். மகளிா் உாிமைத்தொகை இரண்டாம் கட்டமாக விடுபட்டவா்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. மக்களின் மகிழ்ச்சி நமக்கு முக்கியம் என்பதை கருத்தில் கொண்டு பொங்கல் தொகுப்புடன் ரூ 3 ஆயிரம் வழங்கப்பட்டது. முதலமைச்சர் ஆட்சியில் எல்லாத்துறைகளிலுமே தமிழகம்வளர்ச்சி யடைந்துள்ளது. இதை பாஜக அரசு பாராட்டியுள்ளது. திமுக ஆட்சியை குறைசொல்வதற்கு எதுவும் இல்லை 2008ல் கலைஞர் ஆட்சியின் போது ஊராட்சி பகுதியாக இருந்த முள்ளக்காடு முத்தையாபுரம் சங்கரபோி அத்திமரப்பட்டி தூத்துக்குடி ரூரல் பகுதிகள் மாநகராட்சியோடு இணைக்கப்பட்டபின் 2011 முதல் 21 வரை 10 ஆண்டுகாலம் அதிமுக ஆட்சியில் புதிதாக எந்த பணியும் நடைபெறவும் இல்லை அதற்கு தீர்வு காணவேண்டும் என்ற எண்ணமும் அவா்களுக்கு இல்லை திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின் மாநகராட்சி பகுதி வளர்ச்சிக்கென்று பல்வேறு வகையில் நிதி ஓதுக்கீடு செய்யப்பட்டு புதிய தாா்சாலைகள் கால்வாய்கள் என கட்டமைப்பு பணிகளை உருவாக்கி நல்ல வளர்ச்சி அடைந்துள்ளது. தமிழகத்தில் மக்கள் வாழ்வாதாரமும் உயரவேண்டும் தமிழ்நாடு தலை சிறந்த மாநிலமாக இருக்க வேண்டும். என்று பணியாற்றி வரும் தமிழக முதலமைச்சர் ஆட்சியில் எல்லோருக்கும் எல்லாம் என்ற அடிப்படையில் ஜாதிமதம் பாா்க்காமல் தமிழ்நாட்டில் அனைவரும் ஓற்றுமையாக வாழ்ந்து வருகின்றனா் இந்த ஓற்றுமையுடன் 2026ல் நடைபெறவுள்ள சட்டமன்ற தோ்தலில் நாம் யாா் என்று அவா்களுக்கு காட்ட வேண்டும் அதற்கான பணிகளை இப்போதே அனைவரும் துவக்க வேண்டும் திமுக அரசுக்கு எல்லோரும் ஆதரவு கொடுத்து மீண்டும் தளபதியாரை அாியனையில் அமர செய்ய உறுதி செய்ய வேண்டும். சூாிய ஓளிதான் தமிழகத்தில் எல்லோருக்கும் ஔியாக காலையில் உதிப்பதை போல் உங்கள் வாழ்வும் உயரவேண்டும். சமத்துவம் மலரட்டும் தைப்பிறந்தாள் வழி பிறக்கும் என்பதை போல் எல்லோருக்கும் நல்ல வழி பிறக்கட்டும் என்று பேசினாா்.
விழாவில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாநகர இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன்ஜேக்கப், கவுன்சிலா் கண்ணன், மாநகர விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளா் டினோ, வட்டப்பிரதிநிதி பாஸ்கா், முன்னாள் அறங்காவலா் குழு தலைவர் செந்தில்குமாா், மற்றும் மணி, அல்பட் உள்பட பலர் கலந்து கொண்டனா்.

Exit mobile version