Site icon thoothukudipeople.com

“உஷார்.. கண்காணிப்பில் தூத்துக்குடி!குடியரசு தினத்தை முன்னிட்டு ரயில் நிலையத்தில் பலத்த பாதுகாப்பு!

நாட்டின் 77-வது குடியரசு தின விழா நாளை (ஜனவரி 26) நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, பொது இடங்கள் மற்றும் போக்குவரத்து மையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடி ரயில் நிலையத்தில் இன்று போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். பயணிகள் கொண்டு வரும் சூட்கேஸ், பேக் மற்றும் உடமைகளை மெட்டல் டிடெக்டர் கொண்டு போலீசார் அணு அணுவாகச் சோதனையிட்டனர். மேலும், ரயில் பெட்டிகள், பார்சல் அலுவலகம் மற்றும் ரயில் நிலைய வளாகத்திற்குள் வரும் அனைத்து வாகனங்களும் தீவிர கண்காணிப்புக்கு உள்ளாக்கப்பட்டன.

சந்தேகப்படும்படியான பொருட்கள் அல்லது நபர்கள் குறித்து உடனடி தகவல் அளிக்குமாறு பயணிகளிடம் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த அதிரடி சோதனையால் தூத்துக்குடி ரயில் நிலையம் போலீசாரின் முழு பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

Exit mobile version