Site icon thoothukudipeople.com

தூத்துக்குடி எஸ்டிபிஐ.,கட்சியின் பூத் முகவர்கள் நியமனக் கூட்டம்!

தூத்துக்குடி,நவம்பர்-23,

தூத்துக்குடியில் எஸ்டிபிஐ., கட்சியின் பூத் முகவர்கள் நியமனக் கூட்டம் நடைபெற்றது.

எஸ்டிபிஐ., தூத்துக்குடி மாவட்டம், தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பூத்களுக்கான BLA 2 பூத் முகவர்கள் நியமனக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டம் தூத்துக்குடி தொகுதித் தலைவர் காதர் உசேன் தலைமையில் நடைபெற்றது. தொகுதிச் செயலாளர் ரியாஸ் வரவேற்புரை ஆற்றினார். மாவட்டத் துணைத் தலைவர் மைதீன் கனி மற்றும் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் அஜீஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக மாவட்டச் செயற்குழு உறுப்பினரும், மாவட்ட BLA பொறுப்பாளருமாகிய குலசை தாஹிர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.அவர், கட்சியின் தேர்தல் பணிகளைத் திறம்படச் செயல்படுத்தும் வகையில், புதிய பூத் முகவர்களை அதிகாரப்பூர்வமாக நியமனம் செய்தார்.
இறுதியாக, தூத்துக்குடி தொகுதித் துணைத் தலைவர் எடிசன் நன்றியுரை வழங்கினார். இந்த நியமனக் கூட்டத்தில், தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு கிளைகளைச் சேர்ந்த நிர்வாகிகளும் பெருமளவில் கலந்துகொண்டு சிறப்பித்தனர். தேர்தல் பணிகளைத் தொடங்கும் வகையில் இந்தக் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது.

Exit mobile version