தூத்துக்குடி சித்தர் பீடத்தில் புத்தாண்டு சிறப்பு வழிபாடு..!

தூத்துக்குடி சித்தர் பீடத்தில் புத்தாண்டு வழிபாடு நடைபெற்றது.தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யனடைப்பு ஸ்ரீசித்தர் நகரிலுள்ள ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி-காலபைரவர் ஸ்ரீசித்தர் பீடத்தில் புத்தாண்டு தின சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
புத்தாண்டு பிறப்பினை முன்னிட்டு, பக்தர்களின் வாழ்வில் கடன் சுமைகள் யாவும் நீங்கிடவேண்டியும், துன்பங்கள் எல்லாம் நீங்கிட வேண்டியும், ”சாக்தஸ்ரீ” சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் வழிபாடுகள் நடைபெற்றது. ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி, மஹா காலபைரவர், குருமகாலிங்கேஸ்வரர், சரஸ்வதி, லெட்சுமி தேவியருக்கு பால், இளநீர், மஞ்சள், தேன், பன்னீர், சந்தன உள்ளிட்ட அபிஷேகம், அலங்காரம், தீபாராதனையுடன் வழிபாடுகள் நடைபெற்று அன்னதானம் வழங்கப்பட்டது.

Leave a Reply