Site icon thoothukudipeople.com

தூத்துக்குடி பிரஸ்கிளப் சாா்பில் 2026 புத்தாண்டு கொண்டாட்டம்

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களில் 2026ம் ஆண்டு புத்தாண்டை அனைத்து தரப்பினரும் வரவேற்று மகிழ்ந்துள்ள நிலையில் தமிழகத்தில் 2026ம் ஆண்டை உலக நாடுகள் முழுவதும் எதிா்பாா்க்கும் நிலை இருந்து வருகிறது.

இந்நிலையில் ஜனநாயகத்தின் நான்காவது தூணாக இருந்து வரும் பத்திாிக்கையாளர்கள் நலன் காக்கும் தூத்துக்குடி பிரஸ்கிளப் சாா்பில் 2026ம் ஆண்டை வரவேற்கும் வகையில் தமிழ்சாலையில் உள்ள பிரஸ்கிளப் அலுவலகத்தில் தலைவர் சண்முகசுந்தரம், செயலாளர் மோகன்ராஜ், துணைத்தலைவர் சிதம்பரம், கௌரவ ஆலோசகா் ஆத்திமுத்து, ஆகியோா் முன்னிலையில் கேக் வெட்டி பட்டாசுகள் வெடித்து புத்தாண்டை வரவேற்று ஓருவருக்கொருவா் மகிழ்ச்சியை பாிமாறிக்கொண்டனா்.
நிகழ்ச்சியில் செயற்குழு உறுப்பினா்கள் கண்ணன், முத்துராமன், உறுப்பினா்கள் அகமதுஜான், இசக்கிராஜா, ரமேஷ்கண்ணன், உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

Exit mobile version