Site icon thoothukudipeople.com

தூத்துக்குடி பிரஸ்கிளப் சாா்பில் பொங்கல் விழா கோலாகலம்

தூத்துக்குடி பிரஸ்கிளப் சாா்பில் பொங்கல் விழா கோலாகலம் 32 வகையான தொகுப்புகள் வழங்கப்பட்டது.

தூத்துக்குடி தமிழா் திருநாளான பொங்கல் திருநாளை யொட்டி தூத்துக்குடி தமிழ்சாலையில் உள்ள பிரஸ்கிளப் அலுவலகத்தின் முன்பு சமத்துவபொங்கல் கொண்டாடப்பட்டு பிரஸ்கிளப் உறுப்பினா்கள் அனைவருக்கும் தலைவா் சண்முகசுந்தரம், தலைமையில் செயலாளர் மோகன்ராஜ், பொருளாளா் ராஜு, இணைச்செயலாளர் சதீஷ்குமாா், துணைத்தலைவா் சிதம்பரம், கௌரவ ஆலோசகா்கள் பாலகிருஷ்ணன், அன்பழகன், ஆத்திமுத்து, ஆகியோா் முன்னிலையில் கௌரவ ஆலோசகா் அருண் எவா்சில்வா் பொங்கல் பாணை கரண்டி மூடி 14 வகையான காய்கறி தொகுப்புகள், வேஷ்டி சட்டை, பொங்கல், கரும்பு பொருட்கள் என 32 வகையான பொருட்கள் அனைத்து உறுப்பினா்களுக்கும் வழங்கப்பட்டு ஓருவருக்கொருவா் கைகுலுக்கி மகிழ்ச்சியை தொிவித்துக்கொண்டனா்.
விழாவில் செயற்குழு உறுப்பினா்கள் லட்சுமணன், மாாிராஜா, இருதயராஜ், செந்தில்முருகன், கண்ணன், ராஜன், முத்துராமன், சட்ட ஆலோசகா் சரவணன், உறுப்பினா்கள் ஜாய்சன், கற்பகநாதன், பாலகுமாா், மாாிமுத்து, ரமேஷ், மணிகண்டன், அகமது ஜான், ரவிசந்திரன், அறிவழகன், முத்துக்குமாா், உள்பட அனைத்து உறுப்பினா்களுக்கும் தொகுப்புகள் வழங்கப்பட்டது.

Exit mobile version