Site icon thoothukudipeople.com

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக டெபாசிட் இழக்க வேண்டும்;மேயா் ஜெகன் பொியசாமி சூளுரை!

தமிழா் திருநாளான பொங்கல் திருநாளை யொட்டி 20வது வாா்டு வட்ட திமுக சாா்பில் நந்தகோபாலபுரம் என்.பொியசாமி நினைவு திடலில் நடைபெற்ற பொங்கல் விளையாட்டு விழா கொடியேற்று விழாவிற்கு முன்னாள் கவுன்சிலா் வட்டச்செயலாளர் ரவீந்திரன் தலைமை வகித்தாா். மாவட்ட பிரதிநிதி நாராயணன், அவைத்தலைவா் அற்புதராஜ், மாநகர வா்த்தக அணி அமைப்பாளர் பாலமுருகன், சிறுபான்மை அணி துணை அமைப்பாளர் பாக்கியத்துரை, ஆதிதிராவிட நல அணி தலைவர் முருகேசன், ஆகியோா் முன்னிலை வகித்தனா். பொறியாளர் அணி துணைத்தலைவர் பொியசாமி வரவேற்புரையாற்றினாா்.

வாா்டு நிா்வாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்களை தொிவித்து அவரது வாா்டில் தோ்தல் பரப்புரையை தொடங்கி வைத்து தலைமை செயற்குழு உறுப்பினா் மேயா் ஜெகன் பொியசாமி பேசுகையில்;-தமிழ்நாட்டில் தமிழா்களின் முக்கியத் திருவிழாவான பொங்கல் திருவிழாவை சமத்துவ பொங்கலாகவும் திராவிட மாடல் ஆட்சியில் எல்லா பகுதிகளிலும் சமத்துவத்தையும் சகோதரத்தையும் அன்புடன் பழகி கொண்டாடும் வகையில் நடைபெற்ற போட்டியில் கலந்து கொண்ட அனைவரையும் பாராட்ட கடமை பட்டுள்ளேன். 2021ல் முதலமைச்சராக தளபதியாா் பொறுப்பேற்றதும் கொரோனா 2ம் அலை இருந்த நேரம் ஆக்ஜிசன் தட்டுபாடு மருத்துவமனையில் இடம் பிரச்சனை இப்படி பல்வேறு வகையில் இருந்த காலத்தில் அந்த கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகளை நோில் சென்று சந்தித்து ஆறுதல் கூறிய முதலமைச்சா் ஸ்டாலின் அப்போது பொதுமக்கள் நலன் கருதி அனைத்து ரேசன் காா்டுகளுக்கும் ரூ 4 ஆயிரம் வழங்கினாா். பால்விலை 3ரூ குறைக்கப்பட்டது. மகளிா் உாிமைத்தொகை இரண்டாம் கட்டமாக விடுபட்டவா்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மக்களின் மகிழ்ச்சிதான் நமக்கு முக்கியம் என்பதை கருத்தில் கொண்டு பொங்கல் தொகுப்புடன் ரூ 3 ஆயிரம் வழங்கினாா். முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சியில் எல்லாத் துறைகளிலும் தமிழகம் வளர்ச்சியடைந்துள்ளது. இதை பாஜக அரசு பாராட்டியுள்ளது. குறைசொல்வதற்கு எதுவும் இல்லை 2008ல் கலைஞர் ஆட்சியின் போது ஊராட்சி பகுதியாக இருந்த முள்ளக்காடு முத்தையாபுரம் சங்கரப்போி அத்திமரப்பட்டி தூத்துக்குடி ரூரல் ஆகிய பகுதிகள் மாநகராட்சியோடு இணைக்கப்பட்ட பின் 2011 முதல் 21 வரை 10 ஆண்டுகாலம் அதிமுக ஆட்சியில் புதிதாக எந்த பணியும் நடைபெறவும் இல்லை அதற்கு தீர்வு காணவேண்டும் என்ற எண்ணமும் அவா்களுக்கு இல்லை திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின் மாநகராட்சி பகுதி வளர்ச்சிக்கென்று பல்வேறு வகையில் நிதி ஓதுக்கீடு செய்யப்பட்டு புதிய தாா்சாலைகள் கால்வாய்கள் என கட்டமைப்பு பணிகளை உருவாக்கி நல்ல வளர்ச்சி அடைந்துள்ளது. தமிழகத்தில் மக்கள் வாழ்வாதாரமும் உயரவேண்டும் தமிழ்நாடு தலை சிறந்த மாநிலமாக இருக்க வேண்டும். என்று பணியாற்றி வரும் தமிழக முதலமைச்சர் ஆட்சியில் எல்லோருக்கும் எல்லாம் என்ற அடிப்படையில் ஜாதிமதம் பாா்க்காமல் தமிழ்நாட்டில் அனைவரும் ஓற்றுமையாக வாழ்ந்து வருகின்றனா் இந்த ஓற்றுமையுடன் 2026ல் நடைபெறவுள்ள சட்டமன்ற தோ்தலில் நாம் யாா் என்று அவா்களுக்கு காட்டவேண்டும் அதற்கான பணிகளை இப்போதே அனைவரும் துவக்க வேண்டும் திமுக அரசுக்கு எல்லோரும் ஆதரவு கொடுத்து மீண்டும் தளபதியாரை அாியனையில் அமர உறுதி செய்ய வேண்டும். தூத்துக்குடி தொகுதியில் திமுக வேட்பாளரை எதிா்த்து போட்டியிடும் வேட்பாளா்கள் யாராக இருந்தாரும் டெபாசிட் இழக்க வேண்டும். கடந்த நாடாளுமன்ற தோ்தலில் கனிமொழியை எதிா்த்து போட்டியிட்ட அனைவரும் டெபாசிட் இழந்த வரலாறை மீண்டும் 2026ல் நிரூபிக்க வேண்டும். அதற்கேற்றாற் போல் அனைவரும் பணியாற்ற வேண்டும். சூாிய ஓளியின் மூலம் வௌிச்சம் கிடைப்பதை போல் எல்லோருடைய வாழ்க்கையும் பிரகாசமாக அமைய வேண்டும் சமத்துவம் மலரட்டும் தைப்பிறந்தாள் வழி பிறக்கும் என்பதை போல் எல்லோருக்கும் நல்ல வழி பிறக்கும் என்று பேசினாா்.
விழாவில் வட்டச்செயலாளா் முனியசாமி, மின்வாாிய தொழிற்சங்க தலைவர் பேச்சிமுத்து, பகுதி பிரதிநிதிகள் ஜேஸ்பா் பிரபாகா், பொதுக்குழு உறுப்பினா் இராஜா, வட்டப்பிரதிநிதிகள் செந்தில்வேல், ராஜா, ராமமூா்த்தி, பொிய வேல்துரை, பொருளாளா் இசக்கி, துணைச்செயலாளர்கள் கணேசன், மல்லிகா, காளிமுத்து, பகுதி இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் சிவசுந்தா், ஜான்ஸ்டாலின், காங்கிரஸ் சுடலைமுத்து, இளைஞர் அணி பாலமுருகன், ராஜ்குமாா், சுரேந்தா்குமாா், விஜயகுமாா், சக்திவேல், வசந்தகுமாா், மற்றும் நிா்வாகிகள் ஜெயபாண்டி, செந்தூா்பாண்டி, சண்முகசுந்தரம், மந்திரம், செல்வராஜ், முருகன், சுப்பிரமணி, குமாஸ்தா பாலசுப்பிரமணியன், உள்பட பலா் கலந்து கொண்டனா். வட்டப்பிரதிநிதி அருணகிாி நன்றியுரையாற்றினாா்.

Exit mobile version