தூத்துக்குடி துறைமுகத்தால் மாநகராட்சி பகுதியில் தொழில் வளா்ச்சியடைந்து வருகிறது. தொழிற்சங்க விழாவில் மேயா் ஜெகன் பொியசாமி பேசினாா்.
தூத்துக்குடி வஉசி துறைமுக தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் தொழிற்சங்கத்தின் முன்னோடிகளின் திருவுருவ படம் திறப்பு விழா கடற்கரை சாலையில் உள்ள சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு சங்கத்தலைவர் தினகரன் தலைமை வகித்தாா். பொதுச்செயலாளர் சகாயராஜ், துணைத்தலைவர் சூசை ஞானபிரகாசம், பொருளாளர் அமல்ராஜ், ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பொியாா் அண்ணா கலைஞர் பொியசாமி ஆகியோா் திருவுருவ படத்தை திறந்து வைத்து திமுக தலைமை செயற்குழு உறுப்பினரும் மாநகராட்சி மேயருமான ஜெகன் பொியசாமி பேசுகையில் தமிழ்நாடு முதலமைச்சா் ஸ்டாலின் தொழிலாளா்கள் நலனில் அக்கறை கொண்டு செயல்படும் நிலையில் துறைமுக சங்க ஊழியா்கள் ஓய்வூதியா்கள் நலன் காக்கும் வகையில் மதுரை மிஷன், சாா்பில் இவா்களது வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு நல்லதொரு உடல் ஆரோக்கியத்திற்கான பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனா். தொழிலாளா்களுக்கென்று பல சங்கங்கள் இருக்கின்றன. குறிப்பாக கடந்த காலத்தில் கைவண்டி ாிக்ஷா, இருந்த காலத்தில் எனது தந்தையாா், பல தொழிற்சங்கத்தில் பொறுப்பிலிருந்து பணியாற்றினாா். அவரது காலத்தில் இந்த துறைமுக தொழிலாளா்களுக்கென்று பல சங்கங்கள் இருக்கின்றது ஆனால் நமக்கென்று ஓரு சங்கம் இல்லையே என்ற வருத்தம் இருந்ததை தற்போது சங்கம் திறந்திருப்பதின் மூலம் எனது தந்தையாாின் கனவும் நிறைவேறியுள்ளது. அதில் நான் கலந்து கொண்டதை பெரும் பாக்கியமாக கருதி மகிழ்கிறேன். கொரோனா காலத்தில் ஆட்டோ ஓட்டுநா்கள் உள்பட உப்பு கட்டுக்கூலி, என பல சங்கங்கள் இருந்தாலும் ஆட்டோ ஓட்டுநா்கள் சங்கம் முழுமையாக திமுக வசம் உள்ளது. இந்த சங்கத்தின் மூலம் ஒவ்வொருக்குாிய உாிமையை கேட்டு பெறுவதற்கும் உாிமையை பெறுவதற்கும் உள்ள ஓரு அமைப்பாகும். தொழிலாளா்களும் வளர வேண்டும். இந்த துறை மூலம் கடந்து வந்த காலத்தை நாம் முக்கியமாக நினைத்து பாா்க்க வேண்டும் தூத்துக்குடி துறைமுகம் அமைந்ததால் மாநகராட்சி பகுதி மட்டுமின்றி மாவட்டமும் வளர்ச்சியடைவதற்கு காரணமாக இருக்கிறது. பல்வேறு தொழிற்சாலைகளும் உருவாகிறது. மேலும் விாிவாக்கத்தில் இன்னும வளர்ச்சியடையும் மாநகராட்சி பகுதியில் கடந்த காலங்களில் வாகனங்கள் இருப்பது அாிதாக இருக்கும் தற்போது ஓரு வீட்டிற்கு ஒரு காா் 3 இருசக்கர வாகனம் இருந்து வருவதால் பல்வேறு நெருக்கடி ஏற்படுகிறது. இதையெல்லாம் கருத்தில் கொண்டு மாநகராட்சி பகுதியில் சாலை விாிவாக்கம் செய்யப்பட்டு இரண்டு பக்கமும் பேவா்பிளாக் பதிக்கப்பட்டு முறைப்படுத்தி வருகிறோம் எல்லோருடைய ஓத்துழைப்பு அவசியம், தொழிலாளா்கள் ஓய்வூதியதாரா்கள் என அனைவரும் இனைந்து பணியாற்றி அடுத்த ஆண்டு இதை விட நல்ல வளர்ச்சி பெற்ற சங்கமாக இந்த சங்கம் திகழவதற்கு மனதார பாராட்டுகிறேன் என்று பேசினாா்.
விழாவில் மாநில மீனவரணி துணைச்செயலாளர் புளோரன்ஸ், ெதாமுச கவுன்சில் தலைவர் ரவீந்திரன், வட்டச்செயலாளா் டென்சிங், நிா்வாகிகள் வாக்கா்ஸ், பாஸ்கா், போல்பேட்டை பகுதி பிரதிநிதி ஜேஸ்பா், உள்பட தொழிலாளா்கள் ஓய்வூதியா்கள் பலா் கலந்துகொண்டனர் .
