தூத்துக்குடி,நவம்பர்-15,
வடகிழக்குப் பருவமழைக் காலத்தை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டச் செய்தியாளர்கள் நலன் கருதி அவர்களுக்குப் பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டன. இதில், ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்கும் பத்திரிகைத் துறையில் பணியாற்றும் செய்தியாளர்கள், புகைப்படக் கலைஞர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்களுக்கு வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான பி. கீதாஜீவன் அவர்கள், போல் பேட்டை முகாம் அலுவலகத்தில் மழைக்கோட்டுகளை (Rain Coats) வழங்கினார்.இதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி பிரஸ் கிளப் சார்பில் அதன் உறுப்பினர்களுக்கு குடைகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில், பிரஸ் கிளப் தலைவர் சண்முகசுந்தரம், செயலாளர் மோகன்ராஜ், பொருளாளர் ராஜு, துணைத் தலைவர் சிதம்பரம், இணைச்செயலாளர் சதீஸ்குமார், கௌரவ ஆலோசகர்கள் அருண், பாலகிருஷ்ணன், ஆத்திமுத்து, செயற்குழு உறுப்பினர்கள் கண்ணன், மாரிராஜா, இருதயராஜ், முத்துராமன், ராஜன், லெட்சுமணன், சட்ட ஆலோசகர் சரவணன், உறுப்பினர்கள் முரளி கணேஷ், மாணிக்கம், மாரிமுத்து, நீதிராஜன், ஜெயராம், நடராஜன், அறிவழகன், இசக்கிராஜா, காதர்முகைதீன், கருப்பசாமி, ரவி, அருள்ராஜ், மகாராஜன், சந்தனரமேஷ் உள்பட உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

