2026-ம் ஆண்டு ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு, தூத்துக்குடி ராஜாஜி பூங்கா நடைப்பயிற்சி நண்பர்கள் சார்பில் இன்று பூங்காவில் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. இந்தப் புத்தாண்டு கொண்டாட்டத்தில் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்வதோடு மட்டுமல்லாமல், சமூக அக்கறையுடனும் பல நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
நிகழ்வின் தொடக்கமாக நண்பர்கள் அனைவரும் ஒன்றுகூடி கேக் வெட்டி, ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனர். வருகை தந்த அனைவருக்கும் இனிப்பு, காரம் மற்றும் காபி வழங்கப்பட்டது. விழாவின் சிகரமாக, பூங்காவைத் தூய்மையாகப் பராமரிக்கும் துப்புரவுப் பணியாளர்களைக் கௌரவிக்கும் வகையில், அவர்களுக்கு இலவச வேட்டி மற்றும் சேலைகள் வழங்கப்பட்டன.
இந்த விழாவில் சமத்துவ மக்கள் கழகத்தின் சார்பில் மாவட்டச் செயலாளர் மாலைசூடி அற்புதராஜ், மாநில கலை இலக்கிய அணிச் செயலாளர் வக்கீல் அந்தோணி பிச்சை, மாவட்ட அவைத்தலைவர் கண்டிவேல், மாவட்டப் பொருளாளர் லயன் பழனிவேல், மாவட்ட வர்த்தக அணிச் செயலாளர் சிவசு முத்துக்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.
மேலும், தொழிலதிபர்கள் ரத்னா தர்மராஜ், பூக்கடை செல்வராஜ், நடராஜன், சுப்பையா, ஆறுமுகம், பாலசுப்பிரமணியம், முருகேசன், ஜான் மற்றும் வழக்கறிஞர்கள் செல்வக்குமார், வேல்முருகன், மாஸ்டர் தங்கராஜ், எல்.ஐ.சி முகவர்கள் கணேசன், கந்தசாமி, ஜெயக்குமார், ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் பால்ராஜ் மற்றும் ராமர், விக்னேஷ், சேகர், சங்கர் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட நடைப்பயிற்சி நண்பர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு:9894770872,0461-7960026.

