தூத்துக்குடி,நவம்பர்-23,
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் (தமுமுக) தூத்துக்குடி மாவட்ட சிறப்பு நிர்வாகக் குழுக் கூட்டம் மாவட்டத் தலைவர் H.M.அகமது இக்பால் தலைமையில், மாவட்டப் பொருளாளர் செய்யது ஐதுரூஸ் முன்னிலையில் மாவட்ட தமுமுக அலுவலகத்தில் நடைபெற்றது.இந்தக் கூட்டத்தில், முக்கியமாக டிசம்பர் 6 அன்று நடைபெறவிருக்கும் கோரிக்கை ஆர்ப்பாட்டம் குறித்தும், டிசம்பர் 7 அன்று மாநிலப் பொதுச் செயலாளர் கலந்துகொள்ளவிருக்கும் நிகழ்வு குறித்தும் விரிவான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதன்படி, டிசம்பர் 6 அன்று மாலை 4 மணியளவில் தூத்துக்குடி டிவிடி சிக்னல் அருகில், மாநிலச் செயற்குழுவின் தீர்மானத்திற்கிணங்க தோளில் கருப்புத் துண்டு அணிந்து, கருப்புக் கொடி காட்டி மாபெரும் கோரிக்கை ஆர்ப்பாட்டத்தை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கான பரப்புரை மற்றும் ஏற்பாடுகளைத் தீவிரப்படுத்த, மாவட்டம் முழுவதும் துண்டு அறிக்கைகள் விநியோகிப்பது, வால்போஸ்டர்கள் ஒட்டுவது, பள்ளிவாசல்களில் பேனர்கள் வைப்பது மற்றும் ஜமாத் நிர்வாகிகளுக்குத் தலைமையின் கடிதங்களைக் கொடுப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
மேலும், இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு அளிக்குமாறு தோழமைக் கட்சிகளை அழைப்பது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, வருகிற டிசம்பர் 7 அன்று மாநிலப் பொதுச் செயலாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ப.அப்துல் சமது கோவில்பட்டியில் நடைபெறும் கிறிஸ்தவ நல்லிணக்கப் பெருவிழாவில் கலந்துகொள்வதால், அவரை வரவேற்கவும், நிகழ்ச்சியில் கழகச் சகோதரர்கள் பெருந்திரளாகக் கலந்துகொள்ளவும் கேட்டுக் கொள்வது என்று ஒருமனதாகத் தீர்மானிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில், மாவட்டத் துணைத் தலைவர் ஜனோபர் அலி, மாவட்டத் துணைச் செயலாளர்கள் சுலைமான், ஆசிக், செண்பகராஜ், அணிகளின் மாவட்டச் செயலாளர்கள் சம்சுதீன், பிளட் காஜா, மாநகரத் தலைவர் அப்துல் சமது, மாநகரச் செயலாளர் K.அப்பாஸ், துணைச் செயலாளர்கள் பக்ருதீன் அலி, உஸ்மான், அணிகளின் மாநகரச் செயலாளர்கள் மெட்ரோ ஷேக், முகமது ஷஃபி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொண்டனர்.
தூத்துக்குடி மக்கள் செய்திகள்:
செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு:9655550896,0461-7960026
