நாட்டின் 88-வது மத்திய பட்ஜெட் இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. தமிழகத்தைச் சேர்ந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது 9 -வது பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ள நிலையில், 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டிருப்பது வரலாற்றுச் சிறப்பாக அமைந்துள்ளது.
இந்த பட்ஜெட்டை வரவேற்கும் விதமாக, பாரதிய ஜனதா கட்சி தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் தலைமையில் ஸ்ரீவைகுண்டத்தில் பட்டாசுகள் வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. இதையடுத்து மாவட்ட தலைவர் சித்ராங்கதன் பேசுகையில்,தமிழ் கடவுள் முருகன் பெருமானுக்கு உகந்த தைப்பூசம் திருநாளில், தமிழகத்தைச் சேர்ந்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் பட்ஜெட் தாக்கல் செய்திருப்பது தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் நிகழ்வாகும் என்றார். மேலும், தைப்பூசத்துக்கு பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் வாழ்த்து தெரிவித்ததை குறிப்பிட்டு, இது தமிழர் பண்பாட்டிற்கு மத்திய அரசு அளிக்கும் மரியாதை என தெரிவித்தார்.
மேலும் அவர் பேசுகையில், ஆதிச்சநல்லூர் அகழாய்வு வரலாறு உலகத் தொல்லியல் வரலாற்றில் மிக முக்கியமானது என விளக்கினார்.
1876-ல், ஜெர்மன் அறிஞர் Dr. Jagor முதன்முறையாக அகழாய்வு செய்து, அடக்கம் கலங்களை (Burial Urns) வெளிச்சத்திற்கு கொண்டு வந்ததன் மூலம் ஆதிச்சநல்லூர் தமிழர்களின் நாகரிகம் உலக கவனத்திற்கு வந்தது.
1903–1904-ல், இந்திய தொல்லியல் துறை (ASI) சார்பில் F. Alexander Rea மேற்கொண்ட அகழாய்வில், நூற்றுக்கணக்கான மண் கலங்கள், மனித எலும்புகள் மற்றும் உலோகப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. இது தென் இந்தியாவில் கண்டறியப்பட்ட மிகப் பெரிய Burial Site ஆகும்.
21-ஆம் நூற்றாண்டில், Radiocarbon Dating, DNA, Skeletal Analysis போன்ற அறிவியல் முறைகள் மூலம், ஆதிச்சநல்லூர் நாகரிகம் கிமு 3000 ஆண்டுகளுக்கும் முற்பட்டது என்பது உறுதி செய்யப்பட்டது.மத்திய அரசின் நடவடிக்கைகள்
2020–21 மத்திய பட்ஜெட்டில், பாரதிய ஜனதா அரசு ஆதிச்சநல்லூரை “Iconic Archaeological Site” ஆக அறிவித்தது. 2023-ல், உலகத் தரத்திலான அருங்காட்சியகத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.
இந்த திட்டத்திற்காக மத்திய அரசு, இந்திய தொல்லியல் துறை (ASI) மூலம் பல கட்டங்களில் தொடர்ந்து நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது .ஆனால் திமுகவுடன் இருந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் இதற்க்கான முன்னேடுப்பு எதையும் எடுக்க வில்லை என மாவட்ட தலைவர் சித்ராங்கதன் தெரிவித்தார்.மேலும், தூத்துக்குடி மாவட்டம் குலசகரபட்டினத்தில் அமைக்கப்பட்டு வரும் இஸ்ரோ ராக்கெட் ஏவுதளத்திற்காக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் மாவட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் கூறினார்.கிழக்கு கடற்கரை சாலை (ECR) விரிவாக்கத்திற்கும் மத்திய பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது போக்குவரத்து மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் என்றார்.
பெண்கள் – MSME நலத்திட்டங்கள் இந்த பட்ஜெட்டில் பெண்கள் தொழில்முனைவோர்கள் மற்றும் சிறு, குறு தொழிலாளர்களுக்காக (MSME) புதிய கடன் வசதிகள், சுயதொழில் ஊக்குவிப்பு மற்றும் நிதி ஆதரவு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி, இது தமிழகம் மற்றும் தூத்துக்குடி மாவட்ட வளர்ச்சிக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என்றார்.மேலும், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி சுற்றுப்பயண பொறுப்பாளராக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் நியமிக்கப்பட்டிருப்பது, கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு புதிய உற்சாகத்தை ஏற்படுத்தி, வெற்றி வாய்ப்பை உறுதியாக உயர்த்தும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் சித்ராங்கதன், மாவட்ட பொதுச் செயலாளர் செல்வராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் விவேகம் ரமேஷ், மாவட்ட பொருளாளர் பரமசிவம், முன்னாள் மாவட்ட பொதுச் செயலாளர் டி ராஜா,
மாவட்ட துணைத் தலைவர் முத்துராமலிங்கம், சிவராமன், திரு வைகுண்டம் மண்டல் தலைவர் மணிகண்டன்,மாவட்டச் செயலாளர் சங்கர், பொருளாதாரப் பிரிவு மாநில செயலாளர் சுவாமிநாதன், அரசு தொடர்பு பிரிவு மாவட்ட தலைவர் சின்னத்தம்பி பாண்டியன், அமைப்புசாரா மாவட்ட தலைவர் சித்திரை வேல் மற்றும் பாஜக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
