Site icon thoothukudipeople.com

தூத்துக்குடியில் அமைப்புசாரா தொழிலாளர் நல வாரிய சிறப்பு முகாம்: அமைச்சர் கீதா ஜீவன் தொடங்கி வைத்தார்!

தூத்துக்குடி அண்ணா நகர் பகுதி டூவிபுரம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில், அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியத்தில் உறுப்பினராகப் பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம் இன்று நடைபெற்றது. இந்த முகாமை சமூக நலன் அமைச்சரும், வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதா ஜீவன் தொடங்கி வைத்து, முகாமில் பதிவு செய்தவர்களுக்கு தொழிலாளர் நலவாரிய அடையாள அட்டைகளை வழங்கினார்.

 இந்தச் சிறப்பு முகாம், அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியத்தின் கீழ் பதிவு செய்து, அரசு நலத்திட்ட உதவிகளைப் பெறுவதற்கு உதவும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில், மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், பொதுக்குழு உறுப்பினர் கோட்டு ராஜா உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர். இந்த முகாமின் மூலம் ஏராளமான அமைப்புசாரா தொழிலாளர்கள் பயனடைந்தனர்.

Exit mobile version