ஒருவர் யாசகம் பெற்று பிழைப்பு நடத்துபவராக இருந்தாலும், அவரால் தன் மனைவிக்கு ஜீவனாம்சம் வழங்க முடியாது என்று கேரள உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கேரளாவின் குட்டிப்புரத்தைச் சேர்ந்த பார்வை குறைபாடுள்ள சைதலவி என்பவர், மசூதிகளில் யாசகம் பெற்று வாழ்கிறார். இவருக்கு இரண்டு மனைவிகள் இருக்கிறார்கள். முதல் மனைவி ஜூபைரியா, தனது கணவர் மாதத்திற்கு ரூ.25,000-க்கும் மேல் சம்பாதிப்பதாகக் கூறி, தனக்கு ரூ.10,000 ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி குன்னிகிருஷ்ணன், பிச்சை எடுத்து வாழும் ஒருவரால் தனது மனைவிக்கு ஜீவனாம்சம் வழங்க முடியாது என்று தீர்ப்பளித்தார். மேலும், மனுதாரரான ஜூபைரியாவின் வாழ்வாதாரத்திற்குத் தேவையான உதவிகளை மாநில அரசு வழங்க வேண்டும் எனவும் நீதிமன்றம் அறிவுறுத்தியது. அதே சமயம், சைதலவி பலதார மணம் செய்துகொண்டதையும், தன் மனைவிகளுக்கு மிரட்டல் விடுத்ததையும் நீதிமன்றம் கடுமையாகக் கண்டித்தது. இனி இது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டது.
மேலும், சைதலவி தனது இரண்டாவது மனைவியுடன் சேர்ந்து வாழ குடும்ப நல நீதிமன்றம் தகுந்த ஆலோசனைகளை வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். பிச்சை எடுத்து வாழும் நிலையைத் தடுக்க கேரள அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் வலியுறுத்தியது.
செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு:-
தூத்துக்குடி மக்கள் செய்திகள்:
PH-97896-25946,0461-7960026.
டப்ப்