தூத்துக்குடி கிழக்கு மண்டல பாஜக சார்பில் இன்று (ஏப்.14) பொதுமக்களுக்கு கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் நீர், மோர் மற்றும் பழங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் கலந்து கொண்டு, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு நீர், மோர் மற்றும் பழங்களை வழங்கினார். இந்நிகழ்வில் கட்சி நிர்வாகிகள் மற்றும் பாஜக உறுப்பினர்கள் பலர் பங்கேற்றனர்.
தூத்துக்குடியில் பாஜக சார்பில் நீர் மோர் வழங்கல்
