Site icon thoothukudipeople.com

டாக்டர் அம்பேத்கரின் பிறந்த நாளையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

இந்திய அரசியலமைப்பின் தந்தை, பாரத ரத்னா டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு, தமிழ்நாடு அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் தூத்துக்குடி அறிஞர் அண்ணா திருமண மண்டபத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா  நடைபெற்றது.

இந்த நிகழ்வில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், மாநகராட்சி மேயர் ஜெகன் ஆகியோர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியில்  மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் பென்னெட் ஆசீர், மாவட்ட தொழில் மையம் பொது மேலாளர் சொர்ணலதா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Exit mobile version