தமிழக அரசியல் களத்தில் ‘விசில்’ சத்தம்! தவெக-வுக்கு சின்னத்தை ஒதுக்கிய தேர்தல் ஆணையம் – உற்சாகத்தில் தொண்டர்கள்!

நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக), வரும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகி வரும் நிலையில், அக்கட்சிக்கு இந்திய தேர்தல் ஆணையம் ‘விசில்’ (Whistle) சின்னத்தை ஒதுக்கியுள்ளது.கட்சி தொடங்கப்பட்டதில் இருந்தே, மக்களுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் வகையிலும், எளிதில் மக்களைச் சென்றடையும் வகையிலும் ஒரு சின்னத்தை விஜய் தரப்பு எதிர்பார்த்து வந்தது. இந்நிலையில், தேர்தல் ஆணையத்திடம் சின்னம் கோரி விண்ணப்பித்திருந்த நிலையில், தற்போது ‘விசில்’ சின்னம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஊழல் மற்றும் மக்கள் விரோதச் செயல்களுக்கு எதிரான ஒரு எச்சரிக்கை ஒலியாக இந்த விசில் சின்னத்தைக் கட்சித் தலைமை பார்க்கிறது.விளையாட்டு மைதானங்களில் நடுவர்கள் பயன்படுத்தும் விசில், ஒழுக்கத்தையும் நீதியையும் குறிப்பதாகத் தொண்டர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.விசில் என்பது சாமானிய மக்களும், குழந்தைகளும் எளிதில் அடையாளம் காணக்கூடிய ஒரு பொருளாக இருப்பதால், வாக்குச் சேகரிப்பின் போது இது பெரும் பலமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.சின்னம் குறித்த அறிவிப்பு வெளியானவுடன், தூத்துக்குடி உட்பட தமிழகம் முழுவதும் தவெக தொண்டர்கள் இனிப்புகள் வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக, “தமிழக அரசியலில் இனி விஜய்-யின் விசில் சத்தம் அதிரப்போகிறது” எனப் போஸ்டர்கள் அடித்துத் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.சின்னம் ஒதுக்கப்பட்டதைத் தொடர்ந்து, கட்சியின் கொடி மற்றும் கொள்கைகளுடன் இந்த ‘விசில்’ சின்னத்தையும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியில் மாவட்ட வாரியாக நிர்வாகிகள் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். வரும் தேர்தல்களில் பொதுச் சின்னத்தைப் பயன்படுத்திப் போட்டியிடத் தவெக திட்டமிட்டுள்ளது.

Leave a Reply