ஓட்டப்பிடாரம் ஓன்றிய இளைஞர் மாணவரணியினா் முதல்வா் ஸ்டாலினை 2வது முறையாக முதலமைச்சராக்க பணியாற்ற வேண்டும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அறிவுரை வழங்கினார்.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுகவிற்குட்பட்ட ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி வடக்கு ஓன்றிய திமுக இளைஞா் அணி மாணவரணி நிா்வாகிகள் தலைமை கழகத்தால் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மீனவா்நலன் மற்றும் கால்நடை பராமாிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை மாவட்ட திமுக அலுவலகத்தில் ஓட்டப்பிடாரம் வடக்கு ஓன்றிய திமுக செயலாளர் இளையராஜா முன்னிலையில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றனா்.
அப்போது அனிதா ராதாகிருஷ்ணன் கலந்துரையாடலின் போது திமுக தலைமைக்கும் தமிழக முதலமைச்சருக்கும் உறுதுணையாக இருந்து கழகப்பணியை நல்லமுறையில் செய்திட வேண்டும். தலைமை அறிவிக்கும் நிகழ்ச்சிகளில் தவறாமல் கலந்து கொண்டு கட்சியின் கொள்கைகளையும் நல்லாட்சியில் நடைபெறும் மக்கள் நலத்திட்டங்களையும் பொதுமக்களிடம் கொண்டு சேர்த்து திமுகவிற்கு வாக்கு வங்கியை அதிகாிக்க வேண்டும். ஏற்கனவே தலைவர் கூறிய படி 2026ல் நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். என்ற இலக்கை தலைவர் நிர்ணயித்துள்ளார். அதற்கு வலுசோ்க்கும் வகையில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் புதுச்சோி உள்பட 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்று இந்தியாவிற்கே வழிகாட்டும் மாநிலமாக தமிழகம் எந்த கட்சிக்கும் வாய்ப்பளிக்காமல் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி முழுமையாக வெற்றி பெற்றதை போல் 234 தொகுதிகளிலும் முழுமையான வெற்றியை பெறுவதற்கு களப்பணியாற்றுங்கள் உங்கள் உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கும் வகையில் நல்ல எதிர்காலம் நிச்சயம் அமையும் என்று கலந்துரையாடலின் போது அறிவுரை வழங்கினாா். ஓட்டப்பிடாரம் வடக்கு ஓன்றிய திமுக செயலாளா் இளையராஜா, மாவட்ட மாணவரணி அமைப்பாளா் அருண்குமாா், உள்பட பலர் உடனிருந்தனா்.

