இந்திய திருநாட்டின் 77 வது குடியரசு தின விழா இன்று நாடு முழுவதும் SDPI கட்சியின் சார்பில் கொடி ஏற்றியும் நலத்திட்ட உதவிகள் வழங்கியும் கொண்டாடப்பட்டு வருகிறது.அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி தொகுதி திரேஸ்புரம் மேட்டுப்பட்டி பகுதியில் கொடி ஏற்றியும் அதனை தொடர்ந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பணி செய்யக்கூடிய ஊழியர்கள்,நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்களுக்கு காலை உணவும் வழங்கப்பட்டது.
தூத்துக்குடி தொகுதி தலைவர் காதர் உசேன் கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். மேலும் இந்த நிகழ்வில் தூத்துக்குடி மாவட்ட துணைத் தலைவர் மைதீன் கனி,மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் அஜீஸ், தூத்துக்குடி தொகுதி செயலாளர் ரியாஸ், தொகுதி பொருளாளர் அப்துல் ரசாக்,தொகுதி துணைச் செயலாளர் ஷேக் மைதீன், திரேஸ்புரம் கிளை சாகுல்ஹமீது மற்றும் தொகுதி,கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

