Site icon thoothukudipeople.com

தூத்துக்குடியில் தமுமுக – மமக சார்பில் 77-வது குடியரசு தின விழா: தூய்மைப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்!

நாட்டின் 77-வது குடியரசு தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி மாநகர தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் (தமுமுக) மற்றும் மனிதநேய மக்கள் கட்சி (மமக) சார்பில் ரஹ்மத்துல்லாபுரம் மற்றும் அண்ணா நகர் கிளைப் பகுதிகளில் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.

இவ்விழாவில் தேசியக் கொடி ஏற்றப்பட்டு, இனிப்புகள் வழங்கப்பட்டதோடு, ஏழை எளிய மக்களுக்குப் பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.இந்த நிகழ்ச்சிகளுக்கு மாநகர பொறுப்புக் குழுத் தலைவர் ஷேக் மைதீன் தலைமை தாங்கினார்.

மாநகர பொறுப்புக் குழு உறுப்பினர்கள் செய்யதலி, ஷேக் ஜான் ராஜா மற்றும் யூனுஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமுமுக மாவட்டச் செயலாளர் A. யூசுப் கலந்துகொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்து, நிகழ்ச்சிகளைத் தொடங்கி வைத்தார். சிறப்பு அழைப்பாளர்களாக மீனவர் அணி மாவட்டச் செயலாளர் பிரவீன், நுகர்வோர் அணி மாவட்டச் செயலாளர் சம்சுதீன் மற்றும் IPP மாவட்டச் செயலாளர் அப்துல் ரஹீம் ஆகியோர் பங்கேற்றனர்.


குடியரசு தின விழாவை முன்னிட்டு அப்பகுதியைச் சேர்ந்த துப்புரவுப் பணியாளர்களுக்கு வேஷ்டி, சேலை மற்றும் சட்டைகள் வழங்கப்பட்டன. மேலும், கல்வி கற்கும் மாணவர்களுக்குத் தேவையான கல்வி உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் ஜமாத் பெரியவர்கள், வியாபாரிகள் மற்றும் பல்வேறு சமயங்களைச் சார்ந்த பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ரஹ்மத்துல்லாபுரம் கிளைத் தலைவர் ஷேக் மைதீன் தலைமையிலான நிர்வாகிகளும், அண்ணா நகர் கிளைத் தலைவர் அப்துல் ரசாக் தலைமையிலான நிர்வாகிகளும் மிகச் சிறப்பாகச் செய்திருந்தனர்.

Exit mobile version