Site icon thoothukudipeople.com

கோவில்பட்டியில் 7வது ஆண்டு தென் மாவட்ட அளவிலான சிலம்பம் மற்றும் யோகா போட்டி!

தூத்துக்குடி,நவம்பர்-25,

கோவில்பட்டியில் 7வது ஆண்டு தென் மாவட்ட அளவிலான சிலம்பம் மற்றும் யோகா போட்டி நடைபெற்றது.

கோவில்பட்டியில் சவுத் இந்தியன் ஸ்போர்ட்ஸ் மற்றும் கல்ச்சுரல் டிரஸ்ட் நடத்திய 7வது ஆண்டு தென் மாவட்ட அளவிலான சிலம்பம் மற்றும் யோகா போட்டி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு உதவி பேராசிரியர் மகாராஜன் தலைமை வகித்தார். உடற்கல்வி இயக்குநர் உமா சங்கர் முன்னிலை வகித்தார்.
கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனை மருத்துவர் அருள்குமார், கயத்தார் பரணி இன் போடெக் கண்ட்ஸ்ரக்ஷன் வழக்கறிஞர் சுப்பிரமணியன் ஆகியோர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக மாணவரனி துணை அமைப்பாளர் ஆகாஷ் பாண்டியன் சிலம்பம் மற்றும் யோகா கலைஞர்களுக்கு பரிசு வழங்கி கௌரவித்து பேசுகையில்: எல்லோருக்கும் உடல்நலம் முக்கியம். அதிலும் குறிப்பாக ஆரோக்கியத்தோடு வாழ வேண்டும் என்றால் எதாவது ஒருவகையான கலைகளை நாம் கற்றாக வேண்டும். அதிலும் சிலம்பம் உடலுக்கு பலத்தையும், யோகா உள்ளத்திற்கு பலத்தையும் அளிக்கும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த கலைகளை கற்றால் வாழ்வில் ஆரோக்கியமான வாழ்க்கையோடு நீண்ட காலம் வாழலாம் என்று கூறினார்.
சவுத் இந்தியன் ஸ்போர்ட்ஸ் மற்றும் கல்ச்சுரல் டிரஸ்ட் விழா நிறுவனத் தலைவரும் ஒருங்கிணைப்பாளராருமான முருகன் நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தார்.

Exit mobile version