Site icon thoothukudipeople.com

புதியம்புத்தூரில் காமராஜர் பிறந்தநாள் விழா: எம்.எல்.ஏ. சண்முகையா பங்கேற்பு!

கர்மவீரர் காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு, பரணி மீடியா சார்பில் ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட புதியம்புத்தூர் M.C. கனி மஹாலில் சிறுவர், சிறுமிகள், இளம்பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கான பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. இந்த விழாவில் விளையாட்டுப் போட்டிகள், கோலப் போட்டி, நடனப் போட்டி மற்றும் சமையல் போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் ஏராளமானோர் உற்சாகத்துடன் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா கலந்துகொண்டு, போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகளை வழங்கிப் பாராட்டினார்.
இந்த நிகழ்ச்சியில், பரணி மீடியா நிறுவனர் காந்தி கண்ணன், திரைப்பட நடிகை ஜானகி, தலைமை செயற்குழு உறுப்பினர்  செந்தூர்மணி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் நவநீதகிருஷ்ணன், மாவட்ட வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் முத்துக்குமார், மாவட்ட சிறுபான்மை அணி துணை அமைப்பாளர் ஞானதுரை, மாவட்ட ஆதிதிராவிடர் நலக் குழு துணை அமைப்பாளர் மாடசாமி, ஒன்றிய ஆதிதிராவிடர் அணி  கருப்பசாமி, கிளைச் செயலாளர் பாலமுருகன், புதியம்புத்தூர் பாஸ்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

உள்ளூர் தகவல்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள,
தூத்துக்குடி மக்கள் செய்திகள் WhatsApp சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்!
சேனலில் இணைய, இந்த இணைப்பைக் கிளிக் செய்யவும்: https://whatsapp.com/channel/0029Va6ahuJ2UPBOuJiyLl46

Exit mobile version