Site icon thoothukudipeople.com

தூத்துக்குடியில் கருகலைப்பு விழிப்புணா்வு கூட்டம்!

தூத்துக்குடி மாவட்டத்தில் கருக்கலைப்பு என்பது அடிப்படை மனித உரிமை என்ற கருத்தை வலியுறுத்தி மாவட்ட அளவிலான ரூசக் தொண்டு நிறுவனம் நடத்திய பாதுகாப்பான கருக்கலைப்பு குறித்து விழிப்புணர்வு கூட்டம் தனியாா் ஹோட்டலில் நடைபெற்றது.

இணை இயக்குனர் டாக்டர் பிரியதர்ஷினி தலைமையில் பிஜே ரவீந்திரன் தலைமைஉரையாற்றினாா். டாக்டா் பவாணி வரவேற்புரையாற்றினாா். அதனை தொடர்ந்து கருக்கலைப்பு என்பது ஒரு மனித மாண்புடன் தொடர்புடையது அரசு சுகாதார நிலையங்களில் கருக்கலைப்பு சேவையை மேம்படுத்துவது குறித்து நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் இளம் வயது திருமண விழிப்புணர்வு மற்றும் பாலியல் கல்வியினுடைய அவசியம் என்ன என்பது குறித்து பேசப்பட்டது. அதுபோலவே கருக்கலைப்பு சேவை என்பது இளம் வயதினர்க்கு மட்டுமில்லாமல் 40 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு இது ஒரு அடிப்படையான சேவையாக உள்ளது. இதில் கவனம் செலுத்தும் பட்சத்தில் மட்டுமே மகப்பேறு மரண விகிதத்தை நம்மால் குறைக்க முடியும் என்ற கருத்தை வலியுறுத்தி விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தில் மாநகராட்சி நகா்நல அலுவலர் டாக்டா் சரோஜா, மருத்துவ அதிகாரி டாக்டர் வினோஜினி, குடும்ப நலத்துறை இயக்குனர் டாக்டர் பொன் ரவி, அங்கன்வாடி பணியாளர்கள், அரசு செவிலியர் கல்லூரி முதல்வர் ஞான ஜெயந்தி, கவுன்சிலர் முத்துமாரி, அரசுத்துறை அதிகாரிகள் தொடர்புடைய மக்கள் பிரதிநிதிகளான முன்களப் பணியாளர்கள், நிறுவன நண்பர்கள் செவிலியர் கல்லூரி மாணவிகள், உள்பட பலா் கலந்து கொண்டனர். ரேவதி நன்றியுரை வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை ராதா பிரியதர்ஷினி ஆகியோா் செய்திருந்தனா்.

Exit mobile version