Site icon thoothukudipeople.com

பார் கவுன்சில் தேர்தல்: தூத்துக்குடியில் வேட்பாளர் ஏ. ராஜா முஹம்மதுக்கு வழக்கறிஞர்கள் அமோக ஆதரவு!

தூத்துக்குடி,டிசம்பர்-24-

தூத்துக்குடி: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தலை முன்னிட்டு, வேட்பாளர் ஏ. ராஜா முஹம்மது வெற்றி வாய்ப்பு மற்றும் தேர்தல் வியூகங்கள் குறித்த முக்கிய கலந்தாலோசனை கூட்டம் தூத்துக்குடியில் நடைபெற்றது.

சான்றோர் வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் தலைவர் வழக்கறிஞர் சிலுவை கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார்.இந்தச் சிறப்பான நிகழ்வை வழக்கறிஞர்கள் அஜித்கான், சாம்சான் மற்றும் அஜிஸ் ஆகியோர் முன்னின்று ஒருங்கிணைத்தனர்.கூட்டத்தில் பங்கேற்ற வேட்பாளர் ராஜா முஹம்மது, வழக்கறிஞர்களின் நலன் மற்றும் வருங்காலத் திட்டங்கள் குறித்து விரிவாக உரையாற்றினார்.இந்தக் கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மூத்த மற்றும் இளம் வழக்கறிஞர்கள் கலந்துகொண்டு தங்களது ஆதரவை உறுதிப்படுத்தினர்.
தூத்துக்குடி மாநகரம் மட்டுமின்றி, மாவட்டத்தைச் சுற்றியுள்ள அனைத்து பார் அசோசியேஷன்களிலும் வாக்குகளைச் சேகரிப்பதற்கான அதிரடி செயல்திட்டங்கள் மற்றும் தேர்தல் பணிகள் குறித்து இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டன.

Exit mobile version