Site icon thoothukudipeople.com

தூத்துக்குடி மாநகர தமுமுக-மமக புதிய பொறுப்புக் குழு நிர்வாகிகள் தேர்வு!

தூத்துக்குடி,டிசம்பர்-20,

தூத்துக்குடியில் தமுமுக மற்றும் மமக-வின் மாநகர ஆலோசனைக் கூட்டம் மாவட்டத் தலைவர் கயத்தார் அஸ்மத் தலைமையில், மாவட்டச் செயலாளர் யூசுப் முன்னிலையில் நடைபெற்றது.

முன்னதாக மாநகர நிர்வாகம் கலைக்கப்பட்டிருந்த நிலையில், நிர்வாக வசதிக்காக மாநிலப் பிரதிநிதியும் மாவட்டப் பொறுப்பாளருமான ஆசாத்தின் ஆலோசனையின்படி புதிய மாநகர பொறுப்புக் குழு தேர்வு செய்யப்பட்டது. அதன்படி, மாநகர பொறுப்புக் குழு தலைவராக ஷேக்மைதீன் மற்றும் உறுப்பினர்களாக செய்யது அலி, கமர்தீன், ஷேக் ஜான் ராஜா, ஷேக் மைதீன், யூனுஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இக்கூட்டத்தில் மாவட்டத் துணைச் செயலாளர் பீர் மைதீன் மற்றும் மீனவர் அணி, நுகர்வோர் அணி, மாணவர் அணி உள்ளிட்ட பல்வேறு அணிகளின் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் முன்னாள் நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.

Exit mobile version