Site icon thoothukudipeople.com

தூத்துக்குடி ரஹ்மத்துல்லாபுரம் கிளை தமுமுக-மமக புதிய நிர்வாகிகள் தேர்வு!

தூத்துக்குடி மாநகர ரஹ்மத்துல்லாபுரம் கிளை தமுமுக மற்றும் மமக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. தமுமுக-மமக மாநகர பொறுப்புக் குழு தலைவர் ஷேக் மைதீன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், பொறுப்புக் குழு உறுப்பினர்கள் கமர்தீன், ஷேக் ஜான் ராஜா மற்றும் ஷேக் மைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சிறப்பு விருந்தினர்களாக தமுமுக-மமக மாவட்டத் தலைவர் கயத்தார் அஸ்மத் மற்றும் தமுமுக மாவட்டச் செயலாளர் A. யூசுப் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள். இந்த நிர்வாகக் கூட்டத்தில், ரஹ்மத்துல்லாபுரம் கிளையின் பழைய நிர்வாகம் கலைக்கப்பட்டு, புதிய நிர்வாகிகள் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டனர்.
அதன்படி தூத்துக்குடி மாநகர ரஹ்மத்துல்லாபுரம் கிளை தமுமுக மற்றும் மமகவின் புதிய நிர்வாகிகளாக கிளைத் தலைவராக ஷேக் மைதீன் , தமுமுக செயலாளராக முகம்மது ஃபஜுருல்லாஹ் மற்றும் மமக செயலாளராக முகமது ஆசிக் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர். கிளைப் பொருளாளராக அஜ்மல் , துணைத் தலைவராக ஜலால் முஹம்மது பொறுப்பேற்றுள்ளனர். மேலும், தமுமுக துணைச் செயலாளர்களாக ஷேக் மைதீன் மற்றும் சம்சுதீன் ஆகியோரும், மமக துணைச் செயலாளர்களாக சம்சுதீன் மற்றும் அப்பாஸ் ஆகியோரும் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்தக் கூட்டத்தில் நுகர்வோர் அணி மாவட்டச் செயலாளர் சம்சுதீன், IPP மாவட்டச் செயலாளர் அப்துல் ரஹீம், மீனவர் அணி மாவட்டச் செயலாளர் பிரவீன், முன்னாள் IPP மாவட்டச் செயலாளர் அபுல் ஹசன் மற்றும் ரஹ்மத்துல்லாபுரம் கிளையின் ஏராளமான உறுப்பினர்கள் கலந்துகொண்டு புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

Exit mobile version