Site icon thoothukudipeople.com

தமிழக ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்ற தீர்ப்பு;தூத்துக்குடியில் திமுக.,வினர் கொண்டாட்டம்:

நிருபர்-யா.சம்சுதீன்,தூத்துக்குடி.

தமிழக ஆளுநர் குறித்து உச்சநீதிமன்றம் வழங்கிய முக்கிய தீர்ப்பை வரவேற்று தூத்துக்குடியில் திமுகவினர் உற்சாகமாக கொண்டாடினர். சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் உறுதிப்படுத்தாமல் இருந்ததால் அவை ஒப்புதல் பெற்றதாகவே கருதப்படும் எனவும், ஆளுநரின் பழைய நடவடிக்கைகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றன என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்த தீர்ப்புக்கு ஆதரவாக, தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில், எட்டயபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கின் முன்பு பட்டாசுகள் வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் மாவட்ட செயலாளர், அமைச்சர் கீதாஜீவனின் அறிவுறுத்தலின்படி, மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன் தலைமையில் பல திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர். 

இந்நிகழ்வில் மாவட்டத் துணைச் செயலாளர்கள் ராஜ்மோகன் செல்வின், ஆறுமுகம், மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், பொதுக்குழு உறுப்பினர் கஸ்தூரி தங்கம், மாநகர துணைச் செயலாளர் கீதா முருகேசன், பிரமிளா, பகுதிச் செயலாளர்கள் சுரேஷ்குமார், ஜெயக்குமார், ரவீந்திரன், நிர்மல்ராஜ், மேகநாதன், மாவட்ட பிரதிநிதி செல்வகுமார், திமுக.,தகவல் தொழில் நுட்ப பிரிவை சேர்ந்த மார்க்கின் ராபர்ட், வட்டச் செயலாளர்கள் முக்கையா, பாலு, பாலன், கருப்பசாமி, சாமிநாதன், கங்கா ராஜேஷ், செல்வராஜ், சுரேஷ் குமார், பொன்னுச்சாமி, சுரேஷ் மகாராஜன், சுரேஷ், சதீஷ், மாமன்ற உறுப்பினர்கள் ஜான்சி ராணி, தெய்வேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Exit mobile version