Site icon thoothukudipeople.com

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 9 ஆவது ஆண்டு நினைவு தினம்:முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் மலர் அஞ்சலி

தூத்துக்குடி,டிசம்பர்-6-

அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஒ.பன்னீர்செல்வம் ஆணையின்படி முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 9வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாநகர் மாவட்ட அலுவலகம் அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா படத்திற்கு மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்.ஏசாதுரை தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் மாடசாமி, துணைச் செயலாளர் பட்டுக்கனி, செயற்குழு உறுப்பினர் ஸ்ரீவை சந்திரா, பகுதி செயலாளர்கள் செல்லத்துரை, பொய்யாமொழி, வெள்ள பாண்டி, முத்து, தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி செயலாளர் ஜெயராமன், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சாமுவேல், மீனவர் அணி செயலாளர் வின்சென்ட், இளைஞரணி செயலாளர் சுதாகர், அண்ணா தொழிற்சங்க செயலாளர் முத்துப்பட்டன், கலை இலக்கியப் பிரிவு செயலாளர் ஜெயபால், இலக்கிய அணி செயலாளர் தர்மசீலன், எம்ஜிஆர் மன்ற தலைவர் மாரியப்பன், ஜெ. பேரவை இணைச் செயலாளர்கள் ராஜதுரை, அங்குசாமி என்ற சுசீந்திரன், தாளமுத்து நகர் ஊராட்சி செயலாளர் முனியசாமி, இளைஞர் இளம்பெண்கள் பாசறை தலைவர் மகாராஜன், எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர்கள் மந்திரம், செல்வராஜ், மேற்கு பகுதி எம்ஜிஆர் மன்ற தலைவர் எம்ஜிஆர் கணேசன், வட்டசெயலாளர்கள் செல்வகுமார், பொன் அம்சம், மாரிதங்கம், இளைஞரணி துணைச் செயலாளர் சபிக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Exit mobile version