தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படி, தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட வஉசி கல்லூரி அருகில் Turf (செயற்கை தரை) விளையாட்டு மைதானம் கட்டமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இவ்விளையாட்டு மைதானம் கைப்பந்து மற்றும் இறகுப்பந்து போன்ற விளையாட்டுகளுக்கு உருவாக்கப்படுகிறது. இதில் செயற்கையான தரையுடன்,விளையாட்டுப் போட்டிகளுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் பிரத்தியேகமாக நடைபெற்று வருகிறது. இந்த பணியினை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வில் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் மதுபாலன், வட்ட கழக செயலாளரும், முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன் மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.