Site icon thoothukudipeople.com

ஒட்டநத்தம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.75 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடம்: எம்.எல்.ஏ. சண்முகையா அடிக்கல் நாட்டினார்!

தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம், ஒட்டநத்தம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் புதிய கட்டிடம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் அமையவுள்ள இந்தப் புதிய புறநோயாளிகள் பிரிவுக் கட்டிடப் பணிகளை ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்வில் வட்டார மருத்துவ அலுவலர் கோகுல், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் காளிமுத்து, யூனியன் ஆணையாளர் சசிகுமார், உதவிப் பொறியாளர் பாலநமச்சிவாயம், கிராம நிர்வாக அலுவலர் கருப்பசாமி, ஊராட்சிச் செயலர் முத்துசெல்வி, ஒன்றிய செயற்குழு உறுப்பினர் கொண்டல் சுப்பையா, ஒன்றிய மகளிர் தொண்டரணி அமைப்பாளர் காமினி, கிளைச் செயலாளர்கள் ஜான், முருகன், தம்பான் ஆறுமுகராஜா மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்கள், கழக நிர்வாகிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

உள்ளூர் தகவல்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள,
தூத்துக்குடி மக்கள் செய்திகள் WhatsApp சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்!
சேனலில் இணைய, இந்த இணைப்பைக் கிளிக் செய்யவும்: https://whatsapp.com/channel/0029Va6ahuJ2UPBOuJiyLl46

Exit mobile version