Site icon thoothukudipeople.com

தூத்துக்குடி மக்கள் செய்தி எதிரொலி: தூத்துக்குடி மேம்பாலம் அருகே சர்வீஸ் சாலையில் ஏற்பட்ட பள்ளம் சீரமைப்பு!

தூத்துக்குடி,டிசம்பர்-02-

தூத்துக்குடி மேம்பாலம் அருகே வாகனப் போக்குவரத்துக்கு இடையூறாக சர்வீஸ் சாலையில் ஏற்பட்டிருந்த பெரிய பள்ளத்தை உடனடியாகச் சீரமைக்க வேண்டும் என்று, தூத்துக்குடி மக்கள் செய்தியில் படங்களுடன் செய்தி வெளியானது. இந்தச் செய்தியின் எதிரொலியாக, மாநகராட்சி நிர்வாகம் துரித நடவடிக்கை எடுத்துள்ளது.

தொடர்ந்து, இன்று (செவ்வாய்க்கிழமை) மாநகராட்சி ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மேம்பாலத்தின் கீழ் சர்வீஸ் சாலையில் வாகனப் போக்குவரத்துக்கு அச்சுறுத்தலாக இருந்த அந்தப் பெரிய பள்ளத்தை நிரப்பிச் சீரமைத்தனர். இந்த உடனடி நடவடிக்கையால், அந்தப் பகுதியைத் தாண்டிச் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு ஏற்பட்ட சிரமம் நீங்கி, அவர்கள் நிம்மதியடைந்து மகிழ்ச்சி அடைந்தனர்.

மேலும், அந்த சர்வீஸ் சாலையில் சேதமடைந்துள்ள மற்ற பகுதிகளையும் முறையாகச் சீரமைக்க வேண்டும் எனப் பொதுமக்கள் மாநகராட்சிக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தி மற்றும் விளமபர தொடர்புக்கு:9655550896,0461-7960026.

Exit mobile version