Site icon thoothukudipeople.com

பண்டாரம்பட்டி TNDTA பள்ளியில் குடியரசு தின விழா;வழக்கறிஞர் ரமேஷ் பாண்டியன் தேசியக் கொடியேற்றினார்!

தூத்துக்குடி: நாட்டின் குடியரசு தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி அருகே உள்ள பண்டாரம்பட்டி TNDTA தொடக்கப் பள்ளியில் தேசப்பற்றுடன் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவிற்குப் பள்ளியின் தலைமை ஆசிரியர் நெல்சன் பொன்ராஜ் தலைமை தாங்கினார்.

சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட வழக்கறிஞர் ரமேஷ் பாண்டியன், பள்ளி வளாகத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு இனிப்புகளை வழங்கிக் குடியரசு தின வாழ்த்துகளைத் தெரிவித்தார். இந்த நிகழ்வின் போது, “நம் நாடு நம் மக்கள் நம் எதிர்காலம்” (NMEK) கட்சியின் பொதுச் செயலாளர் அருணா தேவி ரமேஷ் பாண்டியன் BA.LLB உடனிருந்து சிறப்பித்தார்.
இந்த விழாவில் பேசியவர்கள், பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு. நெல்சன் பொன்ராஜ் அவர்களின் கல்விப்பணியைப் வெகுவாகப் பாராட்டினர். இவர் தனது பள்ளி மாணவர்களைச் சொந்தச் செலவில் விமானத்தில் அழைத்துச் சென்று சாதனை படைத்தவர் என்பதும், இவரது தன்னலமற்ற பணிக்காகப் பல மாநில விருதுகளைப் பெற்றுப் பெருமை சேர்த்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த விழாவில் பள்ளியின் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

Exit mobile version