தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தலைமையில் திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் நடைபெற உள்ள திருக்குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழா குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
வருகின்ற ஜூலை 7, 2025 அன்று நடைபெற உள்ள இக்கும்பாபிஷேக விழாவிற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், பல்வேறு துறை சார்ந்த அலுவலர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாகக் கேட்டறிந்தார். கூட்டத்தில், விழாவுக்கான ஏற்பாடுகள், பாதுகாப்பு நடவடிக்கைகள், பக்தர்கள் வசதிகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. மேலும், பணிகள் தொய்வின்றி நடைபெறத் தேவையான பல்வேறு ஆலோசனைகளையும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.