Site icon thoothukudipeople.com

தூத்துக்குடி அரசு மருத்துவமனை அம்மா உணவகம் மாலை நேரத்திலும் செயல்படும்:மேயர் தகவல் 

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படி, தூத்துக்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகள் மற்றும் அவர்களுடன் இருக்கும் உறவினர்களின் வேண்டுகோளை ஏற்று, நாளை முதல் மாலை நேரத்திலும் அம்மா உணவகம் செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்த நடவடிக்கையை தூத்துக்குடி மாநகர மேயர்ஜெகன் பெரியசாமி மேற்கொண்டுள்ளார்.

இதன் மூலம் மருத்துவமனையில் தங்கியிருப்போருக்கு தினமும் இரவு உணவு குறைந்த விலையில் கிடைக்கும் வசதி ஏற்படுகிறது.

Exit mobile version