Site icon thoothukudipeople.com

தூத்துக்குடியில் தமுமுக – மமக பொதுக்குழு: புதிய மாநகர நிர்வாகிகள் தேர்வு!

தூத்துக்குடியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் (தமுமுக) மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் (மமக) மாநகர பொதுக்குழு கூட்டம் மிகுந்த எழுச்சியுடன் நடைபெற்றது.

மாவட்டப் பொறுப்பாளர் மற்றும் தலைமை பிரதிநிதி ஆசாத் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், அபுல்ஹசன் (முன்னாள் IPP) இறைவசனம் ஓதி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். மாவட்டச் செயலாளர் A. யூசுப் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
இக்கூட்டத்தில் தமுமுக மாநில துணைப் பொதுச் செயலாளர் மைதீன் சேட்கான் கலந்து கொண்டு எழுச்சி உரையாற்றினார். தலைமை நிர்வாகக் குழு உறுப்பினர் ஜோசப் நொலஸ்கோ சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று சிறப்பித்தார். கூட்டத்தின் முக்கிய நிகழ்வாக, பழைய மாநகர நிர்வாகம் கலைக்கப்பட்டு, புதிய மாநகர நிர்வாகிகள் ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
மாநகரத் தலைவர் (தமுமுக & மமக) ஷேக்மைதீன்,மாநகரச் செயலாளர் (மமக) ஷேக் ஜான் ராஜா,மாநகரச் செயலாளர் (தமுமுக) செய்யது அலி,
மாநகரப் பொருளாளர் (தமுமுக & மமக) யூனுஸ்,துணைச் செயலாளர்கள் சம்சு கனி (தமுமுக), கமர்தீன் (மமக),மாநகர அணிச் செயலாளர்கள் அஜ்மல் (மருத்துவ சேவை அணி), நைனா முகமது (IPP),புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு கட்சித் தொண்டர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். நிகழ்ச்சியின் நிறைவாக, மாவட்டத் தலைவர் கயத்தார் அஸ்மத் உசேன் நன்றியுரை ஆற்றினார்.

Exit mobile version