Site icon thoothukudipeople.com

தூத்துக்குடி பழையகாயல், ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய மற்றும் கிளைக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு!

தூத்துக்குடி மாவட்டம் பழையகாயல் கிளையின் தமுமுக மற்றும் மமக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

தமுமுக-மமக மாவட்டத் தலைவர் கயத்தார் அஸ்மத் உசேன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், தமுமுக மாவட்டச் செயலாளர் A. யூசுப் மற்றும் நுகர்வோர் அணி மாவட்டச் செயலாளர் சம்சுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இந்தக் கூட்டத்தில் பழையகாயல் கிளைக்கான புதிய நிர்வாகிகளும், ஸ்ரீவைகுண்டம் ஒன்றியச் செயலாளரும் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டனர். அதன்படி, ஸ்ரீவைகுண்டம் ஒன்றியச் செயலாளராக முகமது சலீம் தேர்வு செய்யப்பட்டார்.பழையகாயல் கிளையின் புதிய நிர்வாகிகளாக கிளைத் தலைவராக காதர்மீரான் (பாபு) அவர்களும், தமுமுக செயலாளராக முத்தலிப் மற்றும் மமக செயலாளராக முகமது சமீம் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர். கிளைப் பொருளாளர் பொறுப்பை இமாம் அவர்களும், துணைத் தலைவர் பொறுப்பை சதக்கத்துல்லா அவர்களும் கவனிப்பார்கள். தமுமுக துணைச் செயலாளர்களாக அக்பர் அலி, ஹக்கீம், அபூ சுபியான் ஆகிய மூவரும், மமக துணைச் செயலாளர்களாக நவ்ஃபுல், மன்சூர், குதைபியா ஆகிய மூவரும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், சமூக நீதி மாணவர் இயக்கத்தின் கிளைச் செயலாளராக இஜாஸ் அஹமது தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிகழ்வில் பழையகாயல் மூஸா ஜும்மா பள்ளிவாசல் தலைவர் நிஸ்தார் அஹமது, பள்ளிவாசல் இமாம் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

Exit mobile version